மீண்டும் அதிரடியாக அதிகரிக்கும் பலியானவர்களின் எண்ணிக்கை

Thursday, 20 February 2020 - 8:12

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் - 19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வூபேய் மாகாணத்தில் 108 புதிய உயிரிழப்புக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளன.

சீனாவில் இதுவரையில் 75 ஆயிரத்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு உலகம் முழுவதும் 75 ஆயிரத்து 642 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வூஹான் பகுதியில் புதிதாக கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான 653 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் சீனாவின் வூபேய் மாகாணத்தில் ஆயிரத்து 693 பேர் புதிதாக கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் கொவிட் - 19 தொற்று காரணமாக ஈரானில் இருவர் பலியாகியுள்ளனர்.

ஈரான் பிரஜைகள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கொவிட் - 19 தொற்று காரணமாகவே அவர்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதேவேளை சிங்கப்பூரில் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் சிங்கப்பூரில் கொவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில்; 5 பேரின் உடலில் இருந்து வைரஸ் நீக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர்களில் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சீன பெண்ணும் அடங்குவதாக தெரிய வருகின்றது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சு விடுத்து அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.