நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Thursday, 20 February 2020 - 8:14

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கடந்த 29ஆம் திகதி முதல் இதுவரை ஐந்தாயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 தசம் 9 மெட்ரிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.