தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் முக்கிய தீர்மானம்

Friday, 21 February 2020 - 7:09

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை குறித்து இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பான முறுகல் நிலைக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தரப்பினர் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே சின்னம் தொடர்பில் தீர்மானிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையில் சின்னத்தை மாற்றுவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.