இலங்கை அணி வெற்றி

Saturday, 22 February 2020 - 18:07

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.1 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.