சிங்கப்பூரில் கொவிட்

Sunday, 23 February 2020 - 7:51

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சிங்கப்பூரில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 89 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 49 பேரின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் அகற்றப்பட்டுளளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரானில் கொவிட்-19 தொற்று பரவுகின்ற இரண்டு பிரதான நகரங்களிலுள்ள பாடசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் நேற்றைய தினம் ஈரானில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.
 
சர்வதேச ரீதியாக 78 ஆயிரத்து 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களுள் 76 ஆயிரத்து 930 பேர் சீனாவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
இதற்கிடையில் இத்தாலியில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
 
அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள வணிக நிலையங்களை மற்றுமத் பாடசாலைகளை மூடுமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
 
இத்தாலியில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 79 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
இதுதவிர பொது நிகழ்வுகள் நடாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வர்த்தக வாணிப செய்தி
 
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலை 190 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.