பொது தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தல்...

Sunday, 23 February 2020 - 9:27

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
மஹியங்கனை  பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
 
அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்படுவதோடு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பொதுத் தேர்தலுக்கான செலவுகள் குறித்த மதீப்பீடுகள் இடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 500 போடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 70 புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.