ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்திக்கவுள்ள அமெரிக்க அதிபர்

Monday, 24 February 2020 - 13:41

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D
அமெரிக்க ஜனாதிபதி டொனர்ல்ட் டிரம்ப் முதன் முறையாக இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பிரதிநிதிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

அவர் இன்றும் நாளையும் இந்தியாவில் தங்கியிருந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்திக்கவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்ட் குஷ்னா ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தில் இந்திய மற்றும் அமெரிக்காவுக்கு இடையி;லான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் வகையில் பல முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தரப்பினர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலையும் பார்வையிடவுள்ளனர்.