சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான வழக்கு....! இன்று மாலை தெரிந்துவிடும்...!

Tuesday, 25 February 2020 - 12:21

+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81....%21+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
ஸ்டெர்லைட்  தொழிற்சாலையை மூடுமாறு கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகள் பலரும் ஆதரவாக செயற்பட்டதோடு அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல்களையும் தெரிவித்து வந்தனர்.

அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் சென்றிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தளித்த நடிகர் ரஜனிகாந்த  ஆர்பாட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

ரஜனிகாந்தின் குறித்த கருத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜனிகாந்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

எனிம் நேரில் முன்னிலையாவதனை தவிர்க்க விலக்கு அளிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் கொடுக்கப்பட்ட மனு மீது இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் 19வது கட்ட விசாரணையை நேற்று தொடங்கியது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ஆணையம் தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பட்டிருந்தது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி, ஆணையத்திற்கு தனது வழக்கறிஞர் மூலமாக மனு அளித்திருந்தார்.

இவரது இந்த மீது இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜனிகாந்த முன்னிலையானால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலை உருவாகும் என்பதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதால் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.