தவறி விழவில்லை - மரணத்தில் திருப்பம் - கொழும்பில் சம்பவம்

Tuesday, 25 February 2020 - 17:30

%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு கோட்டை - இலங்கை மத்தியவங்கியின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர் தவறி விழவில்லை எனவும் அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனவும் காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காவல் துறை ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்தியவங்கியின் மேல் மாடியிலிருந்து 16 வயது இளைஞர் சற்று முன்னர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் கொண்ட காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதற்கமைய குறித்த இளைஞர் தவறுதலாகவோ அல்லது பிரிதொருவரின் முயற்சியாலேயோ கீழே விழவில்லை எனவும் அவர் தற்கொலை செய்துக்கொண்டே உயிரிழந்துள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மத்திய வங்கியில் கடமையாற்றும் உயர்நிலை உத்தியோகத்தர் ஒருவரின் புதல்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.