Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Wednesday, 26 February 2020 - 11:54
ட்ரம்பின் இரவு விருந்தில் இணைந்துக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான்
678

Views
குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். 

நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். 

இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். 

மேலும் குறித்த விருந்தில் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா ஆகியோரும் ட்ரம்பின் இரவு விருந்தில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ட்ரம்ப் ரஹ்மானிடம் சிறிது நேரம் கலந்துரையாடியிருந்தார். இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top