ஹட்டன்-நுவரெலிய வீதியில் இடம்பெற்ற விபத்து

Wednesday, 26 February 2020 - 13:08

%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
திம்புள்ள-பத்தனை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக சிற்றூர்தி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறு குழந்தை உள்ளிட்ட மூன்று பேரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி குளிர்களி வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், அவருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.