Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+346+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 26 February 2020 - 18:17
மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்காக 346 ஓட்டங்கள்
2,619

Views
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னான்டோ 127 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 119 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 239 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் கொட்ரெல் 4 விக்கெட்டுக்களையும் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top