Hirunews Logo
+8+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+474+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81
Thursday, 27 February 2020 - 8:40
8 ஆயிரத்து 474 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு
83

Views
கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் கடந்த திங்கட்கிழடமை வரையிலான காலப்பகுதியில் 8 ஆயிரத்து 474 மெற்றிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது.
 
இதற்காக அசராங்கம் 423. தசம் 7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
 
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1462.8 மெற்றிக் தொன் நெல் கிளிநொச்சி மாவட்டத்தில் 921.6 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
 
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 மெற்றிக் தொன் நெல் வவுனியா மாவட்டத்தில் 652 தசம் 8 மெற்றிக் தொன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 895 தசம் 2 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
 
அம்பாறை மாவட்டத்தில் ஆயிரத்து 524 தசம் 1 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில்  இரண்டாயிரத்து 58 தசம் 5 மெற்றிக் தொன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
 
திருகோணமலை மாவட்டத்தில் 69 தசம் 6 மெற்றிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிய வருகின்றது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top