வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி..

Thursday, 27 February 2020 - 13:12

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.
 
பலியானவர்களில் 9 சிறார்களும் அடங்குவதாக சர்வதேச தகவலகள் தெரிவிக்கின்றன.
 
சிரிய அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலின் ஒரு கட்டமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
கடந்த டிசம்பர் மாதம் முதல் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
பலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர்
 
கடந்த திங்கட்கிழமை அரச படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர்.
 
அத்துடன் அரச படையினர் வசமிருந்த முக்கிய நகரம் ஒன்றையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.