Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D....%21
Friday, 28 February 2020 - 10:53
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை - மகள் எடுத்த அதிரடி தீர்மானம்....!
5,018

Views
தந்தையின் பெயர் படவெட்டி தாயின் பெயர் நளாயினி

இவர்களுக்கு இரு புதல்விகளும் புதல்வர் ஒருவரும் காணப்படுகின்றனர்.

தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் காணப்படுகின்றது.

வழமையை போன்று ஒரு தினத்தன்று திடீரென தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக மனைவி நளாயினி அறிவிக்கின்றார்.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிடுகின்றனர்.

சடலத்தினை உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்புகின்றனர் காவல் துறையினர்.

சடலத்தை பார்வையிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் இயற்கை மரணமல்ல கொலை செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கின்றனர்.

மனைவியை நளாயினியை காவல் துறையினர் கைது செய்கின்றனர்.

விசாரணைகளின் போது பல திடுக்கிடும் விடயங்கள் வௌிவந்துள்ளன.

படவெட்டி என அழைக்கப்படும் குறித்த நபர் மது போதையில் தனது புதல்விகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கின்றார் என தெரிவித்துள்ளதோடு, அதற்கு இணங்காத பட்சத்தில் கொலை செய்வதாகவும் அச்சுறுத்துவதாக நளாயினி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது புதல்வியை தன்னுடம் பாலியல் உறவிற்கு வருமாறு கோரி துன்புறுத்தியதாகவும் அதனால் தனது புதல்வி கிரைண்டர் கல்லினை தலையில் போட்டு கொலை செய்து விட்டாள் எனவும் நளாயினி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மேட்டூரில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top