Hirunews Logo
%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88...%21+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Friday, 28 February 2020 - 11:08
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை...! சுண்ணாம்பு குளத்தில் சம்பவம்
1,626

Views
கட்டிட தொழில் செய்து மனைவி வீரம்மாள் மகள் தேவயானி மகன் பாலமுரளி நால்வரையும் செவ்வனே நேர்த்தியாக பார்த்துக்கொள்ளும் குடும்ப தலைவர் தான் ரவி ஆவார்.

ரவி என்பவருக்கு 6 சகோதரர்கள் காணப்படுகின்றனர்.

இதில் இரண்டாவது சகோதரரான சிவாவும் ரவி என்பவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால் இருவரும் கதைத்துக்கொள்ளவதில்லை. காணிப்பிரச்சினை காரணமாகவே இவர்கள் கதைத்துக்கொள்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றில் சிவா அவரின் நண்பர்களுடன் இணைந்து ரவி அவரது மனைவி நளாயினி ஆகியோரை தாக்கியுள்ளார்.

அதிக தாக்குதலுக்கு இலக்கான ரவி நேற்று முன்திம் நித்திரைக்கு சென்று விட்டார்.

அதன் பின்னர் அடுத்த நாள் காலையில் நேற்றைய தினம் அவரின் வீடு யாருமற்ற  நிலையில் பூட்டப்பட்டிருந்தது.

இவ்வாறிருக்கு ரவி மூத்த சகோதரன் ராம்தாஸ் இவர்களை தேடி அலைந்துள்ளார்.

இவர்களின் விபரம் அறியாமையினால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் விபரங்கள் கிடைக்கவில்லை.

நேற்று மாலை இவர்களில் மனைவி வீரம்மாள் மற்றும் மகள் தேவயானி ஆகியோர் கடற்கரையருகில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்களை மீட்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர் சிவா என அழைக்கப்படும் சகோதரன் தாக்கியமையினாலேயே மனவிரக்த்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என கண்டறிந்துள்ளனர்.

தனது குடும்பம் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதற்கு காரணம் தனது இரண்டாவது சகோதரன் சிவாவே எனவும் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவொன்றினையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தந்தை மற்றும் மகனின் சடலங்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழ் நாடு திருவள்ளூர் மாவட்டம் சுண்ணாம்புகுளம் கொக்குபாளையம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top