Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 28 February 2020 - 11:40
அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை
9,353

Views
மஸ்கெலிய  - லக்ஸபான வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
 
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தீர்ப்பரவல் ஏற்பட்டதாக எமது செய்த் தொடர்பாளர் தெரிவித்தார்.
 
இதன் காரணமாக 5 ஹெக்டயர் வனப் பகுதி தீக்கிரையாகியுள்ளது.
 
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இனந் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
மலையகப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலையினை அடுத்து காடுகளுக்கு தீ வைக்கம் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 10 மேற்பட்ட வனப்பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெற்றள்ளன.
 
இதேவேளை, நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரையில் 5 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனடிப்படையில் 54 ஆயிரத்து 864 குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
 
மேல், வட மேல் மாகாணங்களிலும் மன்னார், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான வெப்பநிலை காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
இந்த வெப்பமான காலநிலை குறித்து மக்கள் அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top