இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்செயல் சம்பவம்....!

Friday, 28 February 2020 - 19:58

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D....%21
இந்திய தலைநகரில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட 514 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களின் போது, சிறுபான்மையான முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம், தற்போது, முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இன்று முஸ்லிம்களின் ஜூம்மா பிரார்த்தனைகளை முன்னிட்டு மேலதிக பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமைக்கு பின்னர் புதிய வன்செயல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வன்செயல் சம்பவங்களில் 35 உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த எண்ணிக்கை 40 இற்கும் அதிகம் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரியூட்டப்பட்ட வீடுகள் மற்றும் வடிகால்கள் என்பனவற்றை அண்டியுள்ள பிரதேசங்களை காவல்துறையினர் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளை சேர்ந்த ஆறு சமய குழுக்களுக்கு நரேந்திர மோடியின் நிர்வாகம் இந்திய பிரஜாவுரிமை வழங்க முன்வந்திருந்தது.

இருப்பினும், அதில் முஸ்லிம்கள் உள்ளடக்கப்படாதன் காரணமாக வன்செயல்கள் ஏற்பட்டன.

இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பாரபட்சமானது என தெரிவித்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள், 20 கோடி இந்திய மக்களை புறக்கணிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் இருந்த வேளையே இந்த வன்செயல்கள் இடம்பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக தரப்பு வேட்பாளரான பேணி சண்டேர்ஸ் (டீநசnநை ளுயனெநசள) இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அவர் மௌனம் காத்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.