Hirunews Logo
%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
Wednesday, 25 March 2020 - 13:16
ஐ.பி.எல் தொடர்பில் இடம்பெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து..!
37

Views
ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களுடன் நேற்று இடம்பெறவிருந்த இந்திய கிரிக்கெட் சபையின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக காணொளி தொழிநுட்பம் ஊடான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பின்னர் இந்த போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதுடன் வெளிநாட்டு வீரர்கள் வரமுடியாத அளவுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top