Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D..%21
Wednesday, 25 March 2020 - 19:31
பூரண குணமடைந்து ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நபர்..!
3,152

Views
இன்றைய தினம் புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று வரையில் இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் இன்றையதினம் ஒருவர் பூரணகுணமடைந்து ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே இலங்கையில் முதன்முறையாக இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியும் குணமடைந்திருந்தார்.

அதேநேரம் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இந்த நோயில் இருந்து குணமடைந்து நாடு திரும்பிய நிலையில் தற்போது வரையில் 99 பேர் கொரோனா நோயுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

255 பேர் வரையில் இந்த நோய்க்கான அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், சுகாதார மேம்பாட்டு பணிகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலக அளவில் கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 382ஆக அதிகரித்துள்ளது.

இதனால் உலக அளவில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 620 ஆகும்.

அதேநேரம், உலக அளவில் இந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருலட்சத்து 11 ஆயிரத்து 878 பேர் குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top