Hirunews Logo
50+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D
Wednesday, 25 March 2020 - 19:38
50 ரூபாய் நாளாந்தக் கொடுப்பனவை வழங்க வேண்டும்- எம்.திலகராஜ்
387

Views
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு முன்னாள் அரசாங்கத்தினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு இறுதிவரையில் வழங்கப்படாதுவிட்ட 50 ரூபாய் நாளாந்தக் கொடுப்பனவை தற்போது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் படி கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்காக இலங்கை தேயிலை சபையின் நிதியில் இருந்து 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அந்தநிதியை தற்போது பெற்றுக் கொண்டால், தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் வீதம் நிவாரணத்தொகை வழங்க முடியும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, பெருந்தோட்டத்துறை மக்கள் நலன்சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள அதிகார சபையின் பொறிமுறையின் கீழ் நடவடிக்கைககள் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top