Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 25 March 2020 - 20:45
கொரோனா தொடர்பில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் கருத்து
114

Views
இந்தியா எதிர்வரும் 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவுகளை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அந்த அணியின் வீரர் விராட் கோலி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் எனப்படும் யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என சச்சின் டென்டுல்கர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வீட்டுக்குள் இருக்குமாறும் பாதுகாப்பாக செயற்படுமாறும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top