Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81...%21
Thursday, 26 March 2020 - 7:22
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாதாந்த சந்தா பணத்தை அறவிடாது...!
213

Views
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த மாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து மாதாந்த சந்தா பணத்தை அறவிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்று பிரச்சினை நிறைவடையும் வரையில் தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சங்கத்திற்கான மாதாந்த சந்தா பணத்தை அறவிடப்படாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

அதேபோன்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் கொவிட்-19 தொற்று பிரச்சினை நிறைவடையும் வரையில் தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சங்கத்திற்கான மாதாந்த சந்தா பணத்தை அறவிடாது என அதன் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதேவேளை மாதாந்த சந்தா விடயத்தில் ஏற்கனவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கம் அறிவித்துள்ளது. சில தோட்டக்கமிட்டி தலைவர்கள் தங்களது தோட்ட முகாமையுடன் கதைத்து சந்தாவை நிறுத்தி உள்ளனர்.

எல்லா தோட்டங்களிலும் இந்த நடைமுறை தொடரும்.

மறு அறிவித்தல் வரும்வரை சந்தா பணம் அறவிடப்படாது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்தும் தெளிவுடன் செயற்பட வேண்டும்.

தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான நடைமுறைகளை கையாள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top