Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 26 March 2020 - 14:32
பல்வேறு மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில்
1,275

Views
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் தற்போது தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள சதோச வர்த்தக நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு விரைவாக பொருட்களை வழங்குவதற்கான பொறிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

500 ரூபா, ஆயிரம் ரூபா, மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொதிகளாக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாக சதோச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் மக்கள் குறித்த பொதிகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் இன்று முற்பகல் 10.30 வரையில் தலவாக்கலை நகரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தாங்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மேலும் சில பகுதிகளில் மக்கள் நெருக்கமாக செயற்படுவதான எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

அவர்களை அமைதியான முறையில் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top