Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+223+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
Thursday, 26 March 2020 - 15:50
கொரோனாவிற்கு விடைகொடுத்த 223 இலங்கையர்கள்...!
907

Views
நான்கு தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 42 பேரும் தியத்தலாவ தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 38 பேரும் புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 125 பேரும் மியன்குளம் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 18 பேரும் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறிய இரண்டாயிரத்து 908 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உந்துருளிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 748 வாகனங்னள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிரகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் 111 பேர் கைது செய்யப்பட்டதோடு 19 வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top