Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%2C+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%2C+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88...%21%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 26 March 2020 - 16:51
கொழும்பு, கம்பஹா, களுத்துறையிலிருந்து வெளியேற முற்றாக தடை...!விசேட அறிவிப்பு
1,194

Views
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதோடு மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேற முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்து யாழ்ப்பாணத்திற்கு மாத்திரம் மீள அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்த மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கும்.

பின்னர் குறித்த பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கும் சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக மக்களும், விற்பனை நிலையங்களும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட உத்தரவுகளுக்கு அமைய, நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக அபாயகர பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர அனுமதிக்கப்படும்.

அதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top