Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D....%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D....%21
Thursday, 26 March 2020 - 17:24
தயவு செய்து போலி பிரசாரம் வேண்டாம்....! பிரதமரின் வேண்டுகோள்....!
617

Views
அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் 19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் தொடர்பாக போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படடுள்ளது.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவது உட்பட பிரதமர் மேற்கொண்டுள்ள தீர்மானங்களை போலியான முறையில் சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

நிதியாற்றல் உள்ள, இல்லாத அனைவரும் கொரோனா அனர்த்தம் காரணமாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் தேவைகளுக்காக கீழ்தரமான முறையில் இவ்வாறான போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவதனைக் கண்டிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு நேற்று முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

கட்சி, நிற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் போலியான தகவல்களை சமூகமயப்படுத்தி அரசாங்கத்தின் முயற்சியை குறைகூறுவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க உதவி வழங்குமாறு அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top