Hirunews Logo
21%2C297+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF....%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D...%21
Thursday, 26 March 2020 - 18:24
21,297 பேர் இதுவரை கொரோனாவால் பலி....! வைரஸால் நிலைகுலைந்த மூன்றாவது கோள்...!
676

Views
ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது,

அத்துடன் 9 ஆயிரத்து 529 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து தமது நாட்டுக்குள் விமானங்கள் வருவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளது.

இதனடிப்படையில் ரஷ்யாவில் இதுவரையில் 658 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 3 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பை ரஷ்ய ஜனாதிபதி நேற்று ஒத்திவைத்துள்ளார்.

இதேவேளை கொவிட்-19 தொற்று காரணமாக ஜேர்மனியில் பலியானவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜேர்மனியில் இதுவரையில் 36 ஆயிரத்து 508 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் கொவிட்- 19 தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனடிப்படையில் அமெரிக்காவில் இதுவரையில் ஆயிரத்து 50 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 69 ஆயிரத்து 171 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இத்தாலியில் கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 683 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா தொற்றின் தாக்கம் இத்தாலியின் தெற்கு பகுதியில் அதிகமாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் கொவிட்-19 தொற்று காரணமாக இத்தாலியில் இதுவரையில் 7 ஆயிரத்து 503 பேர் பலியாகியுள்ளனர்.

வேறு எந்த நாடுகளிலும் ஏற்பாடாத அளவு உயிர் சேதங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக இத்தாலியில் பதிவாகியுள்ளது.

அத்துடன் இத்தாலியில் 5 ஆயிரத்து 210 பேர் புதிதான கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதன் அடிப்படையில் மொத்தமாக 74 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இத்தாலியை தொடர்ந்து கொவிட்-19 தொற்று காரணமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை விட ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக 656 பேர் புதிதாக பலியாகியுள்ளனர்.

இதனடிப்படையில் ஸ்பெயினில் இதுவரையில் 3 ஆயிரத்து 647 பேர் பலியாகியுள்ளனர்.
அங்கு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 49 ஆயிரத்து 516 பேர் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச ரீதியாக கொவிட்-19 தொற்றுக்கு காரணமாக 4 லட்சத்து 71 ஆயிரத்து 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சர்வதேச ரீதியில் 21 ஆயிரத்து 297 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top