பிரித்தானிய மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளரின் ஆலோசனை..!

Saturday, 04 April 2020 - 9:47

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88..%21
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,605ஆக அதிகரித்துள்ளதோடு, இது சீனாவின் எண்ணிக்கையை விட உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 38,168ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டு மக்கள் அனைவரும் இந்த வாரம் வீடுகளிலேயே இருக்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹென்காக் தெரிவித்துள்ளார். குறித்த சுகாதாரத்துறை செயலாளருக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.