குழந்தை ஒன்றை பிரசவித்த பேருவளையில் அடையாளம் காணப்பட்ட பெண்..!

Saturday, 04 April 2020 - 12:56

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D..%21
பேருவளையில் அடையாளம் காணப்பட்ட பெண், நேற்றைய தினம் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் எவ்வித கொரோனா நோய் அறிகுறியும் வெளிப்படவில்லை என பேருவளை பொது சுகாதார பரிசோகரான மருத்துவர் வருண செனவிரத்ன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

குறித்த பெண் மகப்பேற்றுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் குழந்தையை பிரசவிக்க இருந்த சமயத்தில், அவரின் முகவரியை ஆராயந்தபோது, அவர் பேருவளை - பன்னில பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சந்தேகத்தின் பேரில் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து எவ்வித வைரஸ் தொற்று அறிகுறியும் தென்பட்டிக்கவில்லை என பேருவளை பொது சுகாதார பரிசோகரான மருத்துவர் வருண செனவிரத்ன தெரிவித்தார்.

முன்னதாக பேருவளை - பன்னில பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரை, குறித்த பெண் அண்மையில் சந்தித்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், முதலாவது தொற்றாளர், பொருட்களை கொள்வனவு செய்த வர்த்தக நிலையத்தில் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்தமையினால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பேருவளை பொது சுகாதார பரிசோகரான மருத்துவர் வருண செனவிரத்ன் தெரிவித்தார்.

தொற்றுக்கு உள்ளான பெண்ணின் கணவர்தான வர்த்தக நிலையங்களுக்கு செல்வதானால், அவர் மூலமாக குறித்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதுடன், பெண்ணின் கணவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

எனவே, குறித்த பகுதியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க எதிர்பார்ப்பதாக பேருவளை பொது சுகாதார பரிசோகரான மருத்துவர் வருண செனவிரத்ன தெரிவித்தார்.