பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் முக்கிய கோரிக்கை

Saturday, 04 April 2020 - 13:15

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் வேதன குறைப்பு குறித்து தாங்கள் தற்போது சிந்திக்கவில்லை என பங்களாதேஷ் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாகி நிஷாமுதீன் சவுத்ரி நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பங்களாதேஷில் ஜுன் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் தொடர்களை பிற்போடப்பட அல்லது இரத்துச் செய்யும் நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கட் சபை தலைமை நிர்வாகி நிஷாமுதீன் சவுத்ரி, தற்போதைய நெருக்கடி நிலைமையில், தங்களின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக எவ்வாறு செயற்பட முடியும் என்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.