கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வர்த்தகம் பாரிய பின்னடைவு...!

Sunday, 05 April 2020 - 14:07

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81...%21
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக வர்த்தகம் பாரிய பின்னடைவினை எதிர்நோக்குவதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தொற்று மேலும் அதிகரிக்கும் போது நிலைமை மேலும் மோசமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விநியோக வலைப்பின்னல் பெரும் சீரற்ற நிலையை அடைந்துள்ளது.

இவற்றை எதிர்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான வழி வகைகள் குறித்து இலங்கை பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அடையாளம் காணப்பட்ட அத்தியாவசிய வர்த்தக நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள், விநியோகஸ்தர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள், சேவைகள் எனபன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.