உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Monday, 06 April 2020 - 7:39

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 1643 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் 21 நாட்கள் நாடு தழுவிய முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராம பகுதிகளில் மக்கள் தமது தங்க நகைகளை விற்பனை செய்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது ஜீவணோபாயத்தை இழந்துள்ள மக்கள் அன்றாட வாழ்கக்கையை நடத்தி செல்வதற்காக இவ்வாறு தங்க நகைகளை விற்பனை செய்து அவற்றை பணமாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.