சுற்றுலாத்துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி

Tuesday, 07 April 2020 - 7:10

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது போல, சுற்றுலாத்துறையை சேர்ந்த பணியாளர்களுக்கும் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர்களினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய பாதிக்கப்பட்டவர்கள் தமது கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படுபவர்கள் இந்த விசேட கொடுப்பனவினை பெறுவதற்கான தகுதியினை பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பினை கொண்ட பலர் தற்போது பொருளாதாரத்தில் மிகுந்த பின்னடைவில் உள்ளனர்.

இலங்கையில் உள்ள சகல சர்வதேச வாநூர்தி தளங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறை முற்று முழுவதுமாக செயலிழந்த நிலையில் உள்ளது.

பல விருந்தகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள மிகுதியான சுற்றுலாப் பயணிகளை அவர்களது தாயகங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளிலேயே சுற்றுலாத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, இந்த கொடுப்பனவுகள் முச்சக்கர வண்டி ஓட்டுனர், பயணிகள் பேரூந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.