இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Tuesday, 07 April 2020 - 13:57

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்கா கடுமையான பேரழிவை எதிர்கொண்டுள்ள போதிலும், அமெரிக்க டொலரானது உலகளாவிய பரிமாற்றத்தில் முன்னணியில் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை டொலர் சுமார் 6 சதவீதம் உயர்ந்துள்ளது, இருப்பினும் மார்ச் மாதத்தில் சிறிது சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 199.40 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.