பஷில் ராஜபக்ஷவின் நியமனம் சரியான தெரிவாகும்- சுசில் பிரேமஜயந்த

Wednesday, 08 April 2020 - 7:33

%E0%AE%AA%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நியமித்தமை சரியான தீர்மானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ்ஷ நாணயக்காரவின் கருத்துக்கு பதிலளி;க்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதி செயலணிக்கான நியமனங்கள் முறையாக இடம்பெறவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இவ்வாறு குற்றஞ்சாட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.