சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....!

Wednesday, 08 April 2020 - 19:08

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81....%21
update-
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 7வது நபர் கல்கிசை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மாணிக்கக்கல் வியாபாரி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முந்தைய பதிவு...



இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதுடைய இவர், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உறுதிபடுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆகவும், சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆகவும்,புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆகவும் காணப்படுவதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக காணப்படுகின்றது.