அரிசி வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறக்க தீர்மானம்...!

Thursday, 09 April 2020 - 14:10

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21
அரிசி தட்டுப்பாட்டை தடுக்கும் நோக்கில் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பிரதான அரிசி ஆலைகளை தொடர்ந்தும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தியை முன்னெடுப்பதற்காக அரிசி ஆலைகளை அத்தியாவசிய சேவையாக பெயரிடுவதற்கு இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.