கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...!

Thursday, 09 April 2020 - 20:18

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ்சால் முதல்முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6237 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 17 மரணங்கள் சம்பவித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 186 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை குறித்த தொற்றால் 15 லட்சத்து 32 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 லட்சத்து 37 ஆயிரத்து 471 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.