இலங்கை தொடர்பான அறிக்கை

Saturday, 24 January 2015 - 20:49

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சேனின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் விசாரணை நடத்தி இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பந்தமான முழுமையான ஆய்வை உள்ளடக்கி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையின் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips