100 நாள் செயற்றிட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்து கோரல்

Sunday, 01 March 2015 - 20:29

100+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்றிட்டம் மற்றும் அதன் முன்னெற்றம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கோருவதற்கு பிரதமர் காரியாலயம் தீர்மானித்துள்ளது.

பொதுமக்களின் பங்களிப்புடன் மிகவும் பயன்மிக்க, திறன்வாய்ந்த மற்றும் நடுநிலையான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதே தமது நோக்கம் என அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்றிட்டத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளவும், தற்போதைய நடைமுறை செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள www.pmm.gov.lk என்ற இணையத்தை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள், விமர்சனங்கள், பிரேரணைகள், குற்றச்சாட்டுக்கள் இருப்பின், பணிப்பாளர் நாயகம், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக் கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 எனும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்க  முடியும்.

இணையத்தளத்தின் ஊடாக கருத்துக்களை தெரிவிப்பதாயின் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்க முடியும்.

தொலைபேசி ஊடாக தெரிவிப்பதாயின் 0112477915 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips