Slim Nielsen People's Awards 2015 - இலத்திரனியல் ஊடகங்களுக்கான முக்கிய விருதுகளை வென்ற ஹிரு

Saturday, 28 March 2015 - 7:51

Slim+Nielsen+People%27s+Awards+2015+-++%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+
ஸ்லிம் நீல்சன் ஊடக விருது நிகழ்வில் சிறந்த ஊடகங்களாக ஹிரு எப்.எம் - ஹிரு டி.வி

ஸ்லிம் நீல்சன் ஊடக விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த வானொலியாக எமது சகோதர வானொலியான ஹிரு எப்.எம் உம், சிறந்த தொலைகாட்சி சேவையாக ஹிரு டி.வியும் தெரிவாகியுள்ளன.

கொழும்பில்; ஊடக அமைச்சர் கயந்த கருணாத்திலக்க தலைமையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றிருந்தது.

இலங்கையின் சிறந்த வானொலிக்கான மக்கள் விருது ஹிரு எப்.எம்க்கு வழங்கப்பட்டது.

சிறந்த தொலைகாட்சியாக ஹிரு டி.வி தெரிவானது.

சிறந்த செய்தி ஊடகமாகவும் ஹிரு தெரிவாகி இருந்தது.

அத்துடன் சிறந்த இளைஞர் தொலைகாட்சிக்கான விருதும் ஹிரு டி.விக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரேனோ சில்வா , இலங்கையின் ஊடகத்துறையை புதிய பரிமானத்துக்கு கொண்டு செல்லும் தமது எண்ணத்தை மக்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்வதாக தெரிவித்துள்ளார்.



உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஹிரு பெற்றுக் கொள்ளும் விருதுகள், தம்மை மேலும் சக்திமயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரேனோ சில்வா இந்த விருதுகள் அனைத்துக்கும், ஹிரு தொலைகாட்சி மற்றும் வானொலிக்கு உள்ள லட்சக் கணக்கான ரசிகர்களே உரிமையானவர்கள் என்று கூறியுள்ளார்.

















Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips