எதிர் கட்சி தலைவர் தொடர்பில் 7ஆம் திகதி அறிப்பு

Wednesday, 01 April 2015 - 14:25

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக யார் செயற்படுவார் என்பது தொடர்பில் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தமது தீர்மானத்தை எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஸன யாப்பா இதனை தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் எந்த கட்சி பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளது என்பது குறித்த சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முக்கிய கட்சிகளை தன்வசம் கொண்டுள்ளது. அடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகின்றது. அடுத்ததாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது. அதற்கு அடுத்தே ஜே வி பி காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ நேற்றைய தினம் எதிர் கட்சி தலைவர்களை தனித்தனியே சந்தித்து நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவர் தொடர்பில் அவர்களில் நிலைப்பாடுகளை கேட்டறிந்துக் கொண்டார்.

இதன்போது எதிர்கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாடுகளை தெரிவித்தாக தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips