சீர்திருத்தம் தொடர்பான முழுமையான யோசனைகள்

Tuesday, 21 April 2015 - 9:35

+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான முழுமையான யோசனைகள் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களது கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரம சிங்க இதனை தெரிவித்தார்.

கட்சி தலைவர்களது விசேட கூட்டம் நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் நேற்று இடம்பெற்றது.

19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள அண்மையில் உயர்நீதிமன்றம் தமது தீர்மானத்தை அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து ஆளும் கட்சியினால் பல திருத்தங்கள் அதற்கு உள்ளடக்கப்பட்டன.

எனினும், நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களது கூட்டத்தின் போது, குறித்த சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு தமக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே, இன்றைய தினம் அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்க உள்ளதாக பிரதமர் அறிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips