வடமாகாண பொதுச்சேவை முறைப்பாடுகளுக்கான கால எல்லை நீடிப்பு

Tuesday, 21 April 2015 - 9:34

+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வடமாகாண பொதுச்சேவைகள் மற்றும் உள்ளூராட்சிகளில் இடம்பெற்ற முறையற்ற நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து முறைப்பாடு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண சபை விசாரணை குழுவின் தலைவரும் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெகநாதன் இதனை தெரிவித்தார்.

வடமாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து  விசாரிக்க வடமாகாண சபையினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளது

7 பேர் கொண்ட இந்த விசாரணை குழு, வடமாகாண சபை பேரவை செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர்  சந்திப்பொன்றை நடத்தியது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடம் மார்ச் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வடமாகாணத்தில் இடம்பெற்ற முறையற்ற நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து இந்த குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips