மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா

Saturday, 23 May 2015 - 10:05

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE
தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் இன்று பதவி ஏற்கவுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஜெயலலித்தாவின் முதலமைச்சர் பதவி பறிபோனது.

எனினும் இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பில், அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார்.

எவ்வாறாயினும் அவர் சிறைக்கு சென்றதன் பின்னர், அவரின் சட்ட மன்ற உறுப்பினரின் பதவியும் பறிக்கப்பட்டது.

அவர் சிறீரங்கம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டே சட்டமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார்.

இதனை அடுத்து சிறீரங்கம் தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் மற்றுமொருவர் நிறுத்தப்பட்டு புதிய உறுப்பினர் தெரிவாகியுள்ளார்.

எனவே தற்போது ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினர் இல்லை.

ஆனாலும் கூட அவர் முதலமைச்சராக பதவி ஏற்று, ஆறுமாதங்களுக்குள் ஏதேனும் தொகுதியில் இடைத்தேர்தலை வைத்து அவர் சட்டமன்ற உறுப்பினராக தெரிவாக அரசியல் அமைப்பில் இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஜெயலலிதா முதல்வர் பதவியை மீண்டும் ஏற்பதற்கு ஏதுவாக, இடைக்காலத்தில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகியுள்ளார்.

இதற்கு முன்னரும் ஜெயலலிதா இவ்வாறு பதவியை இழக்க நேர்ந்த போதும், பன்னீர்செல்வமே முதலமைச்சராக தெரிவாகி, பின்னர் பதவியை மீண்டு ஜெயலலிதாவுக்கே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips