நரேந்திர மோடிக்கு மதுராவில் கொலை அச்சுறுத்தல்

Monday, 25 May 2015 - 9:35

%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசின் மதுராவுக்கு விஜயம் செய்யும் போது கொலை செய்யப்படுவார் என காவல்துறை உயரதிகாரியின் கைத்தொலைபேசிக்கு அச்சுறுத்தல் விடுத்தவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேஷ் மாநிலம், மதுராவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அங்குள்ள நாக்லா சந்திரபான் கிராமத்தில் இடம்பெறவுள்ள பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில், கடந்த 20ம் திகதி, மதுரா நகர காவல்துறை உயர் அதிகாரியின் கைத்தொலைபேசிக்கு, 'மதுரா வரும்போது நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார்' என அச்சுறுத்தல் விடுக்கும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட கைத்தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்து, தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், நரேந்திர மோடிக்கு மிரட்டல் செய்தி அனுப்பியவர், மதுரா மாவட்டம், நவ்லி கிராமத்தை சேர்ந்த ராம்வீர் என்பவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் போலியான பெயரில் கைத்தொலைபேசி தொடர்பு அட்டையை பெற்று அச்சுறுத்தல் விடுத்திருந்தமை விசாரணைகளில் இருந்து  தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


உத்தரபிரதேஷ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips