உணவகங்களின் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கு தேசிய திட்டம்

Tuesday, 26 May 2015 - 8:49

%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
நாட்டில் உள்ள உணவகங்களின் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கு தேசிய திட்டம் ஒன்று அவசியம் என உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் எமது செய்திச்சேவைக்கு இந்த கருத்தை வெளியிட்டார்.
அவ்வாறான தேசிய திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்திருப்பின் அனர்த்தங்களை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மருதானை எல்பிஃன்ஸ்டன் மண்டபத்திற்கு அருகில் இருந்த உணவகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக மூன்று பேர் பலியாகினர்.

தீப்பரவல் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த நிலையில், கொழும்பு தீயணைப்பு படையின் 11 வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இதன்போது உணவகத்தில் சிறைபட்டிருந்த சிலர் மிகுந்த பிரயத்தனத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டிருந்தனர்.
காயமடைந்த சிலர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips