Update: நீதியரசர் சரத் ஆப்ருவ் பிணையில் செல்ல அனுமதி

Tuesday, 07 July 2015 - 14:32

Update%3A+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+
நீதிமன்றில் சரணடைந்த உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ருவ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவர் 5 லட்சம் சொந்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது வீட்டு பணிப் பெண்ணை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவர்; இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

இதனையடுத்து, காவற்துறையினர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திடம் விளக்கமறித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ருவ் தம்மை தாக்கியதாக வீட்டு பணிப்பெண் கடந்த 27 ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.



Update : Tuesday, 07 July 2015 - 18:09
---------------------------------------------

சரத் ஆப்றூ சரணடைந்தார்

உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

பணிப்பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சரத் ஆப்றூ தனது வீட்டுப் பணிப்பெண்ணை மோசமாக தாக்கியதாகவும் , அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லையெனவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips