தமது போராட்டங்களை தமிழ் சமூகம் மறந்திருக்காது - மனோ கணேசன்

Tuesday, 04 August 2015 - 10:23

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் காணாமல் போன கைது செய்யப்பட்ட  சம்பவங்களின் போது தாம் ஏனைய சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து முன்னெடுத்த போராட்டங்களை தமிழ் சமூகம் மறந்திருக்காது என்று தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்கள் பணியில் அன்று ஈடுபட்டதன் காரணமாகவே தமிழர்களின் பிரச்சினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

எனவே, இன்று சர்வதேச மயப்பட்டுள்ள தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கான வாய்ப்பை தமக்கு வழங்கவேண்டும் என்று மனோ கணேசன் கோரியுள்ளார்.

இந்தநிலையில் பேரம்பேசும் சக்தியை வலுப்படுத்தவே தமது கூட்டமைப்பு, கொழும்பு, நுவரெலிய, பதுளை, கண்டி, மற்றும் இரத்தினபுரி, கம்பஹாவில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips